
கஜா புயல் பாதிப்பு: பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பதற்கு முன் அரசு பொறியாளர்களைக் கொண்டு பள்ளி கட்டடங்களை
புயல் பாதித்த மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பதற்கு முன் அரசு பொறியாளர்களைக் கொண்டு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
திருவாரூர், நாகை, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன் பார்வையிட்டு வருகிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் புயல் பாதிப்புகளை திங்கள்கிழமை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பள்ளிகளைப் பார்வையிட்ட பின், ஆசிரியர்களின் இல்லங்களுக்கும் சென்று பாதிப்புகளை கேட்டு அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் கூறியது:
தற்போதைய புயல் இதுவரை காவிரி டெல்டா மாவட்டம் காணாத பேரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மரங்களும், மின் கம்பங்களும் விழுந்து வீடுகள், பள்ளிக் கட்டடங்களுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்புகள் ஏராளம் என்பதால் ராணுவ கதியில் மீட்புப் பணிகள் மேற்கொண்டாலும் மக்கள் இயல்பு நிலைக்கு வருவதற்கு அதிக நாள்கள் பிடிக்கும். எனவே, மீட்புப் பணிகளை மேலும் அதிகரிக்கும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மண்டலமாக அறிவித்து மத்திய அரசிடமிருந்து கூடுதல் பங்களிப்பை பெற்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளின் மீது மரங்கள் விழுந்துள்ளதால் கட்டட உறுதி கேள்விக்குறியாக உள்ளது. எனவே, பள்ளியின் கட்டட உறுதி தன்மையை அரசு பொறியாளர்களை கொண்டு உறுதி செய்ய வேண்டும். மேலும் பள்ளிகளில் மின் வசதி மற்றும் குடிநீர் வசதி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி திறப்பதற்கு முன் கட்டட உறுதித் தன்மை ஆய்வு, மின்வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றார்.
ஆய்வில் மாவட்டச் செயலாளர்கள் பெரம்பலூர் ராஜேந்திரன், நாகை லெட்சுமி நாராயணன், திருச்சி நீலகண்டன், திருவாரூர் ஈவேரா, முன்னாள் மாவட்டச் செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





