மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஐநா கொள்கைகள் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்திய நூலக இயக்கம் சார்பில், ஐநாவின் கொள்கைகள்

Updated On :8 அக்டோபர் 2018, 7:53 am IST

திருவாரூர் சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்திய நூலக இயக்கம் சார்பில், ஐநாவின் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. 
2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐநா சபைக் கூட்டத்தில், அனைத்து நாடுகளும் தன்னிறைவு பெற்ற நாடுகளாக மாறும் வகையில் 17 குறிக்கோள்கள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அனைத்து நாடுகளும் தனது திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றன. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட செப்.25-ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டில் செப்.25 முதல் அக்.5-ஆம் தேதி வரை 10 நாள்கள் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், திருவாரூரில் உள்ள சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட  குழந்தைகள், ஐநாவின் கொள்கைகளை உருவகப்படுத்தி அமர்ந்தனர். 
 இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மைய நூலகர்கள் ஆண்டாள், ஆசைத்தம்பி ஆகியோர் மாணவர்களுக்கு ஐநாவின் 17 குறிக்கோள்கள் குறித்து விளக்கி கூறுகையில், ஐநா குறிக்கோள்களை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினர். அப்போது அவர்கள், ஐநாவின் குறிக்கோள்களில் ஒன்றான தூய்மையை ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். அத்துடன், பசித்தவர்களுக்கு உணவளிப்பது, தண்ணீரை மிச்சப்படுத்துவது, மின்சாரத்தை மிச்சப்படுத்துவது என ஐநாவின் மற்ற குறிக்கோள்களையும் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாய்ராம் பள்ளி நிர்வாகி கோபு, முதல்வர் லட்சுமி அசோக், ஆசிரியை வி.சுபத்திரை ஆகியோர்  செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.