மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அயோடின் நுண்சத்து பற்றாக்குறை விழிப்புணர்வுப் பிரசாரம்

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அயோடின் நுண்சத்து பற்றாக்குறை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது. 

Updated On :22 அக்டோபர் 2018, 2:53 am

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அயோடின் நுண்சத்து பற்றாக்குறை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது. 
திருவாரூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில், அயோடின் நுண்சத்து பற்றாக்குறை தடுப்பு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  உலக அயோடின் நுண்சத்து பற்றாக்குறை தடுப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மைய பெருந்தலைவர் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில், நகர காவல் நிலைய ஆய்வாளர் ச. குலோத்துங்கன் பங்கேற்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். 
நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுதுறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலர் ஆர். ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் கே. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.