சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 29) சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது.
கடந்த வாரம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது. 5 நாள்களில் சவரனுக்கு ரூ. 2,080 குறைந்து வெள்ளிக்கிழமை சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனையானது.
இதையடுத்து, வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ. 1,13,600-க்கு விற்பனையானது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 1,13,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ. 1,040 குறைந்த நிலையில் இன்று(புதன்) சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 150 குறைந்து ரூ. 13,950 -க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Summary
Chennai live gold and silver rate today april 29
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










