முனைவர் பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு நெட், செட் மற்றும் முனைவர் ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை, அரசுப் பள்ளியில் பணிபுரிகிற நெட், செட் மற்றும் முனைவர் தகுதி பெற்றுள்ள ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் நெட், செட் மற்றும் முனைவர் தகுதி பெற்றுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சென்னையில் முதல்கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

