சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருவாரூரில், சென்னை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் 

Updated On :3 செப்டம்பர் 2018, 7:48 pm

திருவாரூரில், சென்னை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் நிலையிலான அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்னோடி பயிற்சி வகுப்பை, மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சியானது, நேர்முக உதவியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் நிலையிலான அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த முன்னோடி பயிற்சியாக செப். 3,  4 ஆகிய தேதிகளிலும், கண்காணிப்பாளர் நிலையிலான அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறைகள் குறித்த குறுகிய கால பயிற்சியாக செப். 5,  6,  7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இதில் துறையின் ஆய்வு அலுவலர் (பயிற்சி இயக்குநர்) சா. ரெகொபெயாம், பிரிவு அலுவலர் ப. ஜெகதீஷ், பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயிற்சி வழங்குகின்றனர். இதில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர், துணை ஆய்வுக்குழு அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.