வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில்அண்மையில் நடைபெற்ற முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சா.குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்க நிர்வாகக் குழு தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற ஆவன செய்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு பயிர்க்கடன் பெற்று திருப்பிச் செலுத்திய பயனாளிகளுக்கு முதல் கட்டமாக 36 பேருக்கு ரூ. 10 லட்சத்து 84 ஆயிரத்து 880 சம்பா பயிர்க் கடன் வழங்கப்பட்டது. அத்துடன், தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்திய ஜெயம் மகளிர் குழுவுக்கு ரூ. 5 லட்சம், பத்ரகாளியம்மன் மகளிர் குழுவுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், அஷ்டலெட்சுமி மகளிர்சுய உதவிக் குழுவுக்கு ரூ.5 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
மேலும், 13 நபர்களுக்கு விவசாய நகைக் கடன் ரூ. 9 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் தனிநபர் கடனும் வழங்கப்பட்டன. மளிகைக் கடைக்கு கடன் வழங்க அனுமதியளிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்க துணைத் தலைவர் பா.பூபதி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் க.சம்பத், தா.காமராஜ், வ.சின்னப்பா, வீ.ஆறுமுகம், தி.ராஜேஸ்வரி, மு.ரஜினி, ரா.ராஜா, ஜெ.தனலெட்சுமி, த.ரவிச்சந்திரன், சங்கச் செயலாளர் (பொ) ப.கலைவாணன் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிறைவில் சங்க எழுத்தர் ப.உலகநாதன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

