கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அக்.4-இல் குரு பகவான் விருச்சிக ராசிக்கு பிரவேசம்

அக்.4-ஆம் தேதி  குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசம் செய்கிறார். 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

அக்.4-ஆம் தேதி  குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசம் செய்கிறார். 
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் உள்ளது. நவகிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வரும் இக்கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு அக்.4-ஆம் தேதி பெயர்ச்சியடைகிறார். 
இதையொட்டி, குருபெயர்ச்சி லட்சார்ச்சனை  செப்.27 முதல் அக்.1-ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், குருபெயர்ச்சிக்குப் பிறகு அக். 8 முதல் 15-ஆம் தேதி வரை 2-ஆம் கட்டமாக நடைபெறவுள்ளது.
லட்சார்ச்சனையில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினால் செய்த 2 கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும். தோஷ பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழுவிவரங்களுடன் உரியத்தொகையை வரைவோலை எடுத்து திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி வைத்து பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
டிமாண்ட் டிராப்ட் எடுப்பவர் உதவிஆணையர் செயல்
அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையில் அல்லது சிட்டியூனியன் வங்கி (திருவாரூர் மாவட்டம்) ஆலங்குடி-612801, கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து உதவி ஆணையர் செயல்அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில், (குருபரிகார தலம்) ஆலங்குடி-612801. வலங்கைமான்வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு எடுத்து அனுப்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.