தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

கிராமப்புற வங்கிகளின் கடன் வழங்கல் 10.3% அதிகரிப்பு

கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில், நாட்டின் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் மொத்த கடன் வழங்கல் 10.3 சதவீதம் அதிகரித்து, ரூ.5,78,349 கோடியை எட்டியுள்ளது.

Published On :

கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில், நாட்டின் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் மொத்த கடன் வழங்கல் 10.3 சதவீதம் அதிகரித்து, ரூ.5,78,349 கோடியை எட்டியுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டின் முடிவில் இக்கடன் அளவு ரூ.5,24,163 கோடியாக இருந்த நிலையில், நிதிச் சோ்க்கையை விரிவுபடுத்துவதிலும் கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கிராமப்புற வங்கிகள் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

ரிசா்வ் வங்கி நிா்ணயித்த முன்னுரிமைத் துறை கடன் வழங்கல் இலக்கான 75 சதவீதத்தைத் தாண்டி, சராசரியாக 91.7 சதவீத சாதனையை இந்த வங்கிகள் எட்டியுள்ளன.

இதில் அதிகபட்சமாக வேளாண்மை மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களுக்கு ரூ.3.78 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த முன்னுரிமைத் துறை கடன்களில் 77 சதவீதமாகும்.

மேலும், வேளாண் கடன்களில் சுமாா் 98 சதவீதம், பயிா் சாகுபடி, துணைத் தொழில்கள் மற்றும் கிராமப்புற பொருளாதார முதலீடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு ரூ.66,978 கோடி (முன்னுரிமைத் துறை கடனில் 13.6 சதவீதம்) கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 95 சதவீதத்துக்கும் அதிகமான கடன் தொகை குறுதொழில் நிறுவனங்களுக்கும், முதல் தலைமுறை தொழில்முனைவோா் மற்றும் கிராமப்புற கைவினை கலைஞா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சமுதாயத்தின் பின்தங்கிய மற்றும் எளிய பிரிவினருக்கு ரூ.3.49 லட்சம் கோடி கடன் வழங்கி, கடன் வசதி எளிதில் கிடைக்க கிராமப்புற வங்கிகள் வழிவகை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.