இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பாதாளச் சாக்கடைப் பணிகள் இயந்திரமயமாக்கப்படும்: நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்புகள்!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து...

 Municipal Administration

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 7:09 pm IST

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பாதாளச் சாக்கடை பராமரிப்பை முழுமையாக இயந்திரமயமாக்க ரூ.102 கோடியில் நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு இன்று (ஆக. 24) அறிவித்தது.

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 18 எண்ணிக்கையிலான புதிய அறிவிப்புகளை தமிழக அரசு இன்று (ஆக. 24) வெளியிட்டுள்ளது.

அதில், கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர்

’’கோயம்புத்தூர் மாநகராட்சியில் தற்போது 58 வார்டுகளில் வழங்கப்படும் 24 மணி நேர குடிநீர் சேவையை, மீதமுள்ள 42 வார்டுகளுக்கும் விரிவுபடுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

வெளிப்படையான மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட நகர்ப்புற சேவைகளை உருவாக்க குடிநீர், பாதாளசாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், போக்குவரத்து நகர்ப்புற பசுமை நீர்நிலைகள் மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்தின் (CMIUDM) கீழ் ரூ.25 கோடியில் திட்ட அறிக்கைகள் உருவாக்கப்படும்.

சென்னையின் உள்ள 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுக் கசடிலிருந்து உருவாகும் உயிரி வாயுவை (Bio gas), Compressed Bio Gas ஆக தரம் உயர்த்தி வணிகமயமாக்கப்படும் இத்திட்டத்தின் வாயிலாக, கூடுதல் நிதி வருவாய் கிடைப்பதுடன், பசுமை இல்ல வாயுவை குறைத்தல், Circular Economy நடைமுறைகளை ஊக்குவித்தல், பெட்ரோலிய எரிபொருட்களின் மீதான சார்பைக் குறைத்தல் மற்றும் மலிவான போக்குவரத்திற்கான மாற்று எரிபொருள் திட்டம் உள்ளிட்ட முக்கியமான சுற்றுச்சூழல் நன்மைகளையும் வழங்கும்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பாதாளசாக்கடை பராமரிப்பை முழுமையாக இயந்திரமயமாக்க ரூ.102 கோடியில் நவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகள், சிவகாசி மாநகராட்சி, திருச்செந்தூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் சுகாதாரத்தை மையப்படுத்தி பாதாளசாக்கடை திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.