மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலையில் உள்ளதையடுத்து தவெகவினர் கொண்டாட்டம்...

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய்.

தமிழக முதல்வர் விஜய். - படம்: பிடிஐ.

Published On :

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அதேபோல தாராபுரம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த சத்யபாமா தற்போது 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இதையொட்டி இரு தொகுதிகளிலும் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசிலடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Summary

TVK leading in Maduranthagam, Dharapuram: Celebrations with whistling and distribution of sweets

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.