மதுராந்தகத்தை கைப்பற்றுகிறது தவெக?
மதுராந்தகம் தொகுதியில் சுமார் 4,400 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை வகிப்பது குறித்து...
முதல்வர் விஜய்யுடன் மரகதம் குமரவேல் - கோப்புப் படம்
மதுராந்தகம் தொகுதியில் சுமார் 8,300 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை வகிக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சாா்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சாா்பில் மரகதம் குமரவேல், திமுக சாா்பில் இ.பரந்தாமன், அதிமுக சாா்பில் கணிதா சம்பத், நாதக சாா்பில் ஜானகிராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கடந்த அக். 6-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 1,84,423 வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், மதுராந்தகத்தில் இன்று (அக். 9) வாக்குகள் எண்ணப்பட்டதில் நான்காவது சுற்றில் 4,484 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 15,725 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 11,241 வாக்குகளும், அதிமுகவின் கணிதா சம்பத் 9,691 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Summary
TVK maintains a continuous lead in Maduranthakam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

