
தலைக்கவசம்: கூத்தாநல்லூரில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், கூத்தாநல்லூரில் துண்டுப் பிரசுரங்களை அண்மையில் விநியோகித்தார்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர், தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி, கூத்தாநல்லூர் காவல் நிலையம் சார்பில் துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்யப்பட்டன.
இதை பொதுமக்கள் அதிகம் கூடும் லெட்சுமாங்குடி பாலத்தருகே விநியோகிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் கலந்துகொண்டு, திருவாரூர்- மன்னார்குடி, கொரடாச்சேரி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இருச்சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் எஸ். சத்யா, உதவி ஆய்வாளர்கள் கார்த்திக், நாகராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




