வேவு பார்ப்பது திமுக வேலையில்லை: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு
வேவு பார்ப்பது திமுக வேலையில்லை என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு - கோப்புப்படம்
வேவு பார்ப்பது திமுக வேலையில்லை, மக்களுக்கு வேலை செய்வதே எங்கள் பாணி என்று முன்னாள் அமைச்சரும் துறைமுகம் தொகுதி எம்எல்ஏவுமான சேகர்பாபு கூறியுள்ளார்.
முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளை வைத்து வேவு பார்க்கிறார் என அமைச்சர் ரமேஷ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு சேகர்பாபு இன்று பதிலளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், வேவு பார்ப்பது திமுக வேலையில்லை, மக்களுக்கு வேலை பார்ப்பதுதான் திமுக பணி. முருகருக்கு வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் முருகரும் திமுக-வுக்குதான் வாக்களித்திருப்பார் என்று கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தவெக-வின் கருத்துகளை பார்த்தால் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என மாபியா கும்பல் செயல்படுவது போன்று உள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தபோது, உலக தெய்வங்களில் பெண்ணரசி என்று போற்றப்படும் தெய்வம் மதுரை மீனாட்சி அம்மன். 4 மாதங்கள் மீனாட்சி என்றால் 8 மாதங்கள் சொக்கநாதர் அருள், அந்த திருக்கோயில் வீர வசந்தராயர் மண்டபம் 2018 தீ விபத்தில் சேதடைந்தது, நானும், அமைச்சராக மூர்த்தியும் நேரடியாக நாமக்கல் சென்று கல் தேர்வு செய்து 79 கல் தூண்களோடு வீர வசந்தராயர் மண்டபம் பணிகள் முடிவடைந்துள்ளது.
உலகில் இருக்கும் இந்து திருக்கோயிலுக்கு குடமுழுக்கு தேதி குறிக்கும் வல்லுநர்களைக் கேட்டு 17.9 26 அன்று தேதி குறிப்பிடப்பட்டது. அந்த குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழில் 10 இடங்களில் பிழை உள்ளது. ஹிந்துசமய அறநிலைய துறை கொடைகள் சட்டம் திருக்கோயில் நிர்வாக பொறுப்பு அடங்காவலர் குழுவை சார்ந்தது. அறங்காவர்கள் குழு ஒப்புதல் அளித்தால்தான் இந்த குடமுழுக்கு பணிகள் நடைபெற்றது.
அறங்காவல் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் அவர்கள் பெயரும் இடம்பெறவில்லை. இதையெல்லாம் எடுத்து கூறியுள்ளோம் இந்த பிழைகளை திருத்த வேண்டும், அனைத்து இடங்களிலும் அறங்காவல் குழுவில் தகுதியானவர்களைதான் நியமித்து உள்ளோம், சமூக வலைதளங்களில் திமுகவினர் மீது தவெக பரப்பும் கருத்துகளைப் பார்த்தால் அவதூறு கருத்துகள் அள்ளித் தெளிக்கிறார்கள். இதனைப் பார்த்தாலே அரசியலுக்கு யாரும் வர கூடாது என ஒரு மாபிய கும்பல் செயல்படுகிறது என்பது தெரிகிறது.
அறங்காவல் குழுவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டும் போதிய விண்ணப்பங்கள் வராததால் மூன்று முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக வேவு பார்ப்பதாக கூறுகிறார். ஆனால் வேவு பார்ப்பது திமுக வேலையில்லை, மக்களுக்கு வேலை பார்ப்பதுதான் திமுக பணி.
முருகனுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் அந்த முருகனே திமுகவுக்குத்தான் வாக்களித்திருப்பார். அந்த அளவிற்கு முருகரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
Summary
Spying is not the DMK's job Former Minister Sekar Babu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



