
பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்: திமுக எம்.பி. கனிமொழி
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள பதிவு குறித்து....
கனிமொழி - x / kanimozhi
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும்.
இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கடந்த இரு நாள்களாக ஒரு பெண்ணின் விடியோ வைரலாகப் பரவியது. மாடர்ன் உடையணிந்து காரிலிருந்து இறங்கி வரும் பெண், தவெக அமைச்சர் கீர்த்தனாவைப் போன்று இருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் அதனைப் பகிர்ந்தனர்.
மேலும், விடியோவில் அந்தப் பெண் அணிந்திருந்த உடையும் பலரால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த விடியோவில் இருப்பது தான் அல்ல என்றும் பெண்ணின் உடையை வைத்து விமர்சிப்பது பிற்போக்குத்தனமான மனநிலை என்றும் அமைச்சர் கீர்த்தனா சமூக ஊடகங்களில் அண்மையில் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK MP Kanimozhi has shared a post on her X handle in support of Industries Minister Keerthana.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



