வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

மோதிரம் வழங்கி விளம்பரம்; குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் அக்கறை வேண்டாமா? கனிமொழி

அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

DMK MP Kanimozhi

திமுக எம்.பி. கனிமொழி - ANI

Published On :

அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை என்று கூறியுள்ள திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைமாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான சர்ஃபாக்டன்ட் (Surfactant) மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டால் குழந்தையின் உயிரைக் காக்க இந்த மருந்து அவசியம் என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளிலேயே இந்த மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

"சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத் துறை?

இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா? குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

DMK MP Kanimozhi alleges a lack of life-saving medicines for newborns in govt hospitals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.