ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

முக்கொம்பு மேலணை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

முக்கொம்பு மேலணையில் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்  என, இந்திய கம்யூனிஸட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

முக்கொம்பு மேலணையில் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்  என, இந்திய கம்யூனிஸட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் நகரக்குழு கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. நகரச் செயற்குழு உறுப்பினர் வி.ரெகுபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை.சிவபுண்ணியம் பங்கேற்றுப்  பேசினார். 
கூட்டத்தில் நகரச் செயலாளர் எம்.ஏ.மாரியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.பி.முருகானந்தம், நகர துணைச் செயலாளர் பழக்கடை எஸ்.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் லஞ்சம், ஊழல்போன்ற முறைகேடுகளுக்கு  முடிவு கட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.டி.யு.சி. யும் இணைந்து அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து செப்.17 முதல் 23 வரை தமிழ்நாட்டின் 5 இடங்களில் இருந்து தொடங்க உள்ள பிரசார இயக்கத்தின் ஒருபகுதியாக, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு திருவாரூருக்கு வரும் பயணக் குழுவை வரவேற்று, திருவாரூர் தெற்குவீதியில் பொதுக்கூட்டம்நடத்துவது,
செப். 23-ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் பிரசார நிறைவு பொதுக் கூட்டத்துக்கு திருவாரூர் நகரக் குழுவின் சார்பில் 300 பேர் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ளதால், முக்கொம்பில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோருவது, விவசாயிகள் அனைவருக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் எனக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.