விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் தூய்மை விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் சேந்தமங்கலத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில், தூய்மைப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Published On :

திருவாரூர் சேந்தமங்கலத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில், தூய்மைப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏ.பி. தாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, பதிவாளர் எஸ். புவனேஷ்வரி தலைமை வகித்தார். நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் தலைவர் எஸ். ரவி முன்னிலை வகித்தார்.
பேரணியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது, நீர் சிக்கனம், திறந்த நீர்ப்பாசனம், பசுமை பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் வாசகங்களை கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்களை எழுப்பியபடி மாணவ, மாணவியர் சென்றனர். பின்னர், அப்பகுதி மக்களிடையே சுகாதாரம், தூய்மை குறித்து விளக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.