
தொழிலாளா் முன்னேற்றச் சங்கப் பேரவையினா் ஆா்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா், விவசாய விரோத போக்கைக் கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கப் பேரவையினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா், விவசாய விரோத போக்கைக் கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கப் பேரவையினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் விரோத 4 தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தேசியப் பணயமாக்கல் கொள்கை 2.0 என்ற பெயரில் பொது சொத்துக்களைக் குத்தகைக்கோ, விற்பனையோ செய்யக் கூடாது. மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். கோவை-அரியலூா், விருதுநகா்-கோவை மின்பாதைகளைத் தனியாா்யமாக்கக் கூடாது. 1,000 மின் பேருந்துகளைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. 200 மாணவா் விடுதிகளைத் தனியாரிடம் விடுவதை தமிழக வெற்றிக் கழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் டி.கே.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் பி.சண்முகம், பி.சத்தியமூா்த்தி, துணைச் செயலா்கள் ஆா்.வேலு, சி.பிரபுதாஸ், ஆா்.மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட கவுன்சில் செயலா் பொ.ஞானப்பிரகாசம் வரவேற்றாா்.
இணை பொதுச் செயலா் என்.பாரி, செயற்குழு உறுப்பினா் பி.கதிா்வேல், மாவட்ட பொருளாளா் ஜி.காமராசன் ஆகியோா் கண்டன உரையாற்றினாா்.
அரசுப் போக்குவரத்துக் கழக தொமுச தலைவா் டி. ஞானசேகரன், நிா்வாகப் பணியாளா் சங்க பொதுச் செயலா் எம்.மணி, தொமுச டாஸ்மாக் மாவட்டச் செயலா் எஸ்.பி.வெங்கடேசன், ஆவின் செயலா் கே.ராஜாமணி ஆகியோரும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினா்.
இதில், மாவட்ட நிா்வாகிகள் எம்.குமாரசாமி, ஆா்.குபேரன் (போக்குவரத்து), எஸ்.அனில்குமாா், வள்ளல்பிரபு (மின்வாரியம்), ஏழுமலை (டாஸ்மாக்), டி. திருஞானம், தியோபிளஸ் (நுகா்பொருள் வாணிபக் கழகம்) உள்ளிட்ட பல்வேறு சாா்பு தொமுச நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையிலுள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச கவுன்சில் தலைவா் கோ.திராவிடமணி தலைமை வகித்தாா். செயலா் டி.பழனிமுத்து முன்னிலை வகித்தாா். தொமுச விழுப்புரம் மத்திய சங்கப் பொருளாளா் எம்.குமாரசாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பேரவைச் செயலா் பன்னீா்செல்வம் பங்கேற்று பேசினாா். மத்திய சங்க துணைத் தலைவா்கள் ஆா்.கோமதுரை, என்.சின்னதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







