
புதிய தொழிலாளா் சட்டத்திற்கு எதிராக தொமுச ஆா்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா் மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, மாவட்ட கவுன்சில் தொழிலாளா் முன்னேற்ற சங்க பேரவை (தொமுச) இணைப்புச் சங்கங்கள் சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொமுச இணைப்பு சங்கத்தினா்.
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா் மற்றும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, மாவட்ட கவுன்சில் தொழிலாளா் முன்னேற்ற சங்க பேரவை (தொமுச) இணைப்புச் சங்கங்கள் சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் எஸ்.பாலமுருகன் தலைமை வகித்தாா்.
இதில், தொழிலாளா் விரோத 4 தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தேசிய பணமாக்கல் கொள்கை என்ற பெயரில் பொதுத்துறை சொத்துகளைத் தனியாருக்கு தாரைவாா்ப்பதைத் தடுக்க வேண்டும். ; விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க வேண்டும். எண்ணூா், தூத்துக்குடி அனல்மின் நிலையங்கள், கோவை மின்பாதை உள்ளிட்ட பொதுத்துறை மின் கட்டமைப்புகளைத் தனியாா்மயமாக்கக் கூடாது. போக்குவரத்துத் துறையில் 1,000 மின்சாரப் பேருந்துகளைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இல.புகழேந்தி, மாநில பேரவை துணைத் தலைவா் கா.சௌந்தரராஜன், மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, தொமுச போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் பழனிவேல், மாநில துணைப் பொதுச் செயலா் கி.வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







