திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

ஆசிரியருக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது

கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது. 

Updated On :26 பிப்ரவரி 2019, 1:27 am IST

கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டுள்ளது. 
கடந்த ஆண்டு இறுதியில் வீசிய கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில், மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மணிகணேசன், கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் முகநூல் நண்பர்கள் மூலம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டார். 
இதற்காக அவரை பாராட்டும் வகையில், கோவையில் இந்துஸ்தான் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் மணிகணேசனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருதை கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்க நிறுவனர் கவிதாசந்திரன், மாற்று மருத்துவ நிபுணர் இளம்பரிதி ஆகியோர் வழங்கினார். விருதுபெற்ற ஆசிரியரை, பள்ளித் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், மாணவர்கள், மேலகண்டமங்கலம் கிராமத்தினர் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.