திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நன்னிலம் பகுதியில் பிப்ரவரி 26 மின்தடை

நன்னிலம் மற்றும் நீலக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) மின் விநியோகம் இருக்காது

Updated On :25 பிப்ரவரி 2019, 6:33 am IST

நன்னிலம் மற்றும் நீலக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருவாரூர் உதவி செயற் பொறியாளர் (புறநகர்)
என். பிரபா தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நன்னிலம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூர், ஏனங்குடி, ஆண்டிப்பந்தல், குவளைக்கால், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், ஆணைக்குப்பம், தட்டாத்திமூலை, மூங்கில்குடி, கீழ்க்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை, புளிச்சக்காடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 
நீலக்குடி பகுதியில்...இதேபோல் பிப்ரவரி 26-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நீலக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வண்டாம்பாளை, சேந்தமங்கலம், நீலக்குடி, திருப்பயத்தங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருவாரூர் மின்வாரிய (நகர்) உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.