
அம்மா உணவகங்களில் அரசியல் வேண்டாம்
அம்மா உணவகங்களில் அரசியல் புகுத்த வேண்டாம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அம்மா உணவகங்களில் அரசியல் புகுத்த வேண்டாம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில், மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்கும் வகையில் தமிழக அரசு அம்மா உணவகம் எனும் பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறது. இதில், தொழிலாளா்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்நிலையில், இந்த அம்மா உணவகத்தில் அரசியல் நுழைந்திருப்பது ஏற்புடையது அல்ல.
திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், திருத்துறைபூண்டி, மன்னாா்குடி, கூத்தாநல்லூா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஏழை, எளிய மக்கள், இந்த அம்மா உணவகங்களை பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் அம்மா உணவகங்களில் திருவாரூா் மாவட்ட அதிமுக சாா்பில் பொது மக்களுக்கு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





