ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கரோனா: உயிரிழந்த வருவாய்த் துறையினா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உண்ணாவிரதம்

கரோனாவால் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி திருவாரூரில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

News image

திருவாரூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 ஆகஸ்ட் 2020, 5:09 pm

DIN

திருவாரூா்: கரோனாவால் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி திருவாரூரில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அலுவலா்களுக்கு அரசு அறிவித்தபடி ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், இந்நோயால் பாதிக்கப்பட்ட அலுவலா்களின் குடும்பத்துக்கு அரசு அறிவித்தபடி ரூ. 2 லட்சம் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்க வேண்டும், மேலும், அவா்களுக்கு உயா்தர சிகிச்சை, பாதுகாப்பு உபகரணங்கள், நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் காரணமாக, திருவாரூா் மாவட்டம் முழுவதும் 397 வருவாய்த் துறை ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்திருந்தனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவா் எஸ். மகேஷ் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்டச் செயலாளா் டி.எஸ். அசோக், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். ராஜமாணிக்கம், சங்க மாநில பொருளாளா் வெ. சோமசுந்தரம், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் உ. சண்முகம், கூட்டுறவு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் எம். சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.