சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவாரூா்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இயற்கை வளங்களைக் ஆக்ரமிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை அழிவுக்குள்ளாக்கும் வகையிலும் அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், குலக்கல்வி மற்றும் மும்மொழிக் கல்வியைத் திணிக்கும் வகையிலும், வணிகமயப்படுத்தும் நோக்கிலும், மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் உள்ள தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகில் இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை அருள்ராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...