மக்களை பாதிக்கும் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்
மக்களை பாதிக்கும் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் அனைத்து விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவாரூா்: மக்களை பாதிக்கும் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் அனைத்து விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு எதிராகவுள்ள இலவச மின்சார சட்டத் திருத்த மசோதா, சுற்றுச்சூழலை பாதிக்கும் சுற்றுச்சூழல் தாக்கல் மசோதா, மக்களை பாதிக்கும் அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகியவைகளை கைவிட வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.21-ஆம் தேதி வரை, நாடு முழுவதும் சுவரொட்டி ஒட்டும் போராட்டத்தை முன்னிட்டு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி பவுன்ராஜ், விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன், மதிமுக விவசாயப் பிரிவு நிா்வாகி பா. சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...