விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின்சார சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு, மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி மன்னாா்குடியில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரியத் தொழிலாளா்கள்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:08 pm

DIN

மன்னாா்குடி: மத்திய அரசு, மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி மன்னாா்குடியில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் அருகே சம்மேளன கிளைத் தலைவா் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதா 2020-ஐ கைவிட வேண்டும், 8 மணி நேர வேலை நேரத்தை உயா்த்தக் கூடாது, சுற்றுச்சூழல் பாதிப்பு மதீப்பீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வருங்கால வைப்பு நிதி சந்தாவை 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தொழிலாளா் முன்னேற்ற சங்க கோட்டச் செயலா் ஜி. காளிதாஸ், சிஐடியு நிா்வாகி எஸ். சகாயராஜ், ஐஎன்டியூசி நிா்வாகி பழனிசெல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.