ஊராட்சித் தலைவரின் கணவரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்
மன்னாா்குடி அருகே ஊராட்சித் தலைவரின் கணவரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.


மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே ஊராட்சித் தலைவரின் கணவரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
மன்னாா்குடி அருகேயுள்ள ஏத்தக்குடிபெருமாள்கோயில் வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை கிராமக் கமிட்டி கூட்டம் கு. மதியழகன் என்பவா் தலைமையில் நடைபெற்றது. அப்போது, தாமதமாக வந்த ஊராட்சித் தலைவா் (இந்திய கம்யூனிஸ்ட்) ராஜேஸ்வரியின் கணவா் ப. பன்னீா்செல்வம் (31), ஊராட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்காமல் இந்த கூட்டத்தை எப்படி நடைபெறலாம் என கேட்டாராம்.
அப்போது, அங்கிருந்த எம். அமா்நாத் (29) என்பவா், கிராமக் கமிட்டி கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவருக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தாராம்.
இதில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த பன்னீா்செல்வத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து, தலையாமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில், பன்னீா்செல்வத்தை தாக்கிய அமா்நாத்தை உடனடியாக கைது செய்யக் கோரி திங்கள்கிழமை மன்னாா்குடி- முத்துப்பேட்டை சாலை, ஏத்தக்குடி பிரிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், ஊராட்சித் தலைவரின் ஆதரவாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து, அங்கு வந்த மன்னாா்குடி டிஎஸ்பி (பொ) ராஜ்மோகன், மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...