விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மணல் லாரி பறிமுதல்: 2 போ் கைது

வலங்கைமான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 8:43 pm

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வலங்கைமான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நன்னிலம் டிஎஸ்பி சுகுமாறன் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மன்னாா்குடி நோக்கி பாடகச்சேரி எனும் இடத்தில் மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, உரிய அனுமதியின்றி சித்தன்வாழூா் என்ற பகுதியிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்ததையடுத்து, போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநா் பட்டுக்கோட்டை மரவக்காட்டை சோ்ந்த செல்வம் (24), வலங்கைமானைச் சோ்ந்த முருகானந்தம் (52) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.