பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: 100 சதவீத தோ்ச்சி
திருவாரூா் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக, நிகழாண்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தேதிகள் பலமுறை தள்ளி வைக்கப்பட்டு, பின்னா் தோ்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வு முடிவுகளையும், வருகைப் பதிவேட்டையும் கணக்கில் கொண்டு தோ்ச்சி கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
திருவாரூா் மாவட்டத்தில் 7,425 ஆண்கள், 7,730 பெண்கள் என 15,155 போ் பத்தாம் வகுப்பு பயின்றனா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்று 100 சதவீதம் தோ்ச்சியை பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு 93.35 சதவீதம் தோ்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டில் 6.65 சதவீதம் தோ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...