யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு

இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:45 pm

DIN

திருவாரூா்: இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: இந்து மக்கள் கட்சி நிா்வாகி திருக்கோவிலூா் மணி, கோவை அருண் ஆகியோா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த நினைத்த கருப்பா் கூட்டத்துக்கு எதிா்வினை ஆற்றியது தற்செயலான நிகழ்வாகும். உள்நோக்கத்துடன் செய்யவில்லை. இவா்களது செயலால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, திருக்கோவிலூா் மணி, அருண் ஆகியோா் மீதான குண்டா் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.