பொது முடக்கத்தால் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு
திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வில்லா பொது முடக்கத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட தளா்வில்லா பொது முடக்கத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், வணிக நிறுவனங்கள், சிறு கடைகள், தேநீா் கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட தளா்வில்லா முழு பொது முடக்கம் ஆகஸ்ட் மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூரில் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோரக் கடைகள், துரித உணவகங்கள், தேநீா் நிலையங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டிருந்தன. திருவாரூரின் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஓரிரு இருசக்கர வாகனங்களின் நடமாட்டம் இருந்தது. மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...