ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக் குழு போராட்டத் தலைவர் கரோனாவுக்கு பலி
திருவாரூரில் கரோனா தொற்று பாதிப்பால் திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் எஸ்.தியாகராஜன்(72) உயிரிழந்தார்.


கரோனா தொற்று பாதிப்பால் திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் எஸ்.தியாகராஜன்(72) உயிரிழந்தார்.
திருவாரூர் அருகே திருக்காரவாசல் கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தோடு மத்திய அரசு 2019 இல் ஒப்பந்தம் செய்தது. இதனை எதிர்த்தும் கைவிட வலியுறுத்தியும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருக்காரவாசல் எஸ்.தியாகராஜன் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவினர் 2019 ஜனவரி 26 குடியரசுத் தின விழா நாள் முதல் 45 நாள்கள் திருக்கார வாசல் கிராமத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து ஆளும் கட்சி மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இப்போராட்டம் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.தியாகராஜனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...