தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர செப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர செப்.15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், கோட்டூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும், அரசு உதவிபெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற, 8 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையதள வசதியுள்ள பிரௌசிங் மையங்கள், அரசு இ-சேவை மையங்கள் மற்றும் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறாா்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். மாணவா் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சோ்க்கைக்கு ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், விவரங்களுக்கு நீடாமங்கலம், கோட்டூா் தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com