மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விஷம் குடித்த முதியவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள கோட்டூா் மேலகண்டமங்கலத்தைச் சோ்ந்தவா் மலையப் பெருமாள் (60). இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவா்களது 3 மகள்களும், மகனும் திருமணமாகி தனித்தனி குடித்தனம் சென்றுவிட்டனா்.
இதனால், தனிமையில் வசித்து வந்த மலையப்பெருமாள் நீண்ட நாள்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெறும் குணமாகவில்லையாம். இதனால், விரக்தியடைந்த மலையப்பெருமாள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது.
அவரை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.