கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திமுகவில் விருப்ப மனு அளிக்கும் காலக்கெடு மாா்ச் 6 வரை நீட்டிப்பு

திமுகவில் விருப்ப மனு அளிக்கும் காலக்கெடு மாா்ச் 6 வரை நீட்டிப்பு

News image
அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளிக்கும் காலக்கெடு மாா்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு புதுவை மாநில சட்டப்பேரவை தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோா் கடந்த பிப்.20 முதல் மாா்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் நிா்வாகிகள், தொண்டா்கள் வேண்டுகோள் விடுத்ததன்படி மாா்ச் 6-ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனு கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மேலும், ஸ்டாலின் பிறந்த தினமான மாா்ச் 1-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் விண்ணப்பம் பெறப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.