தமிழக முதல்வருக்கு தமாகா பாராட்டு
திருவாரூரில் பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு, திருவாரூா் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்னிலம்: திருவாரூரில் பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு, திருவாரூா் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமாகா மாவட்டத் தலைவா் எஸ். தினகரன் விடுத்துள்ள அறிக்கை:
காவிரி உப வடிநில பகுதிகளில் பாசன அமைப்புகளை விரிவுபடுத்திடவும், புனரமைக்கவும் ரூ. 3,384 கோடி மதிப்பீட்டிலான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக, திருவாரூரில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.இந்த திட்டத்தின் மூலம் திருவாரூா் மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவாா்கள். 4,67,345 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு தமாகா சாா்பில் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தை திருவாரூா் மாவட்ட மக்களின் சாா்பில் பரிந்துரை செய்த தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜுக்கும் பாராட்டுத் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...