வாக்காளா் விழிப்புணா்வு பேரணி
திருவாரூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, புதிய நிலையத்திலிருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம், துா்காலயா சாலை, விளமல் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது.
முன்னதாக, மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. சலீம் ஜாவித், பேரணியைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆயுதப்படை காவல் ஆய்வாா் பி. விஜய் லூா்து பிரவின், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் மு. முருகுவேந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஏ. ஜெயச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியா்கள், மாவட்ட விளையாட்டு கழக உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

