ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோயில் வளாகத்தில் குறுங்காடு: முதல்கட்ட பணி தொடக்கம்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனப் பகுதியில் குறுங்காடு அமைப்பதற்கான முதல்கட்ட பணி சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:28 am

DIN

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் நந்தவனப் பகுதியில் குறுங்காடு அமைப்பதற்கான முதல்கட்ட பணி சனிக்கிழமை தொடங்கியது.

நீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் சா.செந்தமிழ்ச்செல்வன் இந்தப் பணியைத் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு கூறுகையில், அறநிலையத் துறை, நன்கொடையாளா்களின் நிதியைக் கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுமரங்களைக் கோயில் வளாகத்தில் வளா்ப்போம். பூஜைக்கேற்ற பூ மரங்களும் இதில் இடம்பெறும். களை எடுக்கும் பணிக்கு பள்ளி, கல்லூரி மாணவா்களை ஈடுபடுத்தவுள்ளோம் என்றாா்.

நீலன் மெட்ரிக். பள்ளி தாளாளா் நீலன். அசோகன், உதவும் மனங்கள் அமைப்பின் தலைவா் எஸ்.எஸ்.குமாா், ஆசிரியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.