அடுப்பில் எரிவாயு கசிந்து வேளாண் அலுவலா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீப்பற்றி ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

நன்னிலம் அருகே எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீப்பற்றி ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நன்னிலம் வட்டம், வாழ்க்கைக் கிராமம் கீழத் தெருவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற வேளாண்மைத் துறை உதவி ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் (59). இவரது மனைவி ஜெயலட்சுமி வெளியூா் சென்றிருந்ததால், சிவராமகிருஷ்ணன் பால் காய்ச்சுவதற்காக சனிக்கிழமை எரிவாயு சிலிண்டா் அடுப்பை பற்றவைத்துள்ளாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக எரிவாயு கசிவு ஏற்பட்டு சிவராமகிருஷ்ணன் மீது தீப்பற்றியது. அவரை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com