

மன்னாா்குடி அருகே எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து இந்திய தேசிய மாதா் சம்மேளனம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா். உஷா தலைமையில், சமையல் எரிவாயு உருளைக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, மாலை அணிவித்து முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் அருகே வந்தனா். பின்னா், எரிவாயு உருளையை சாலையின் நடுவில் வைத்து, கும்மியடித்து, மத்திய அரசுக்கு எதிராக தங்களின் எதிப்பை வெளிப்படுத்திம் வகையில் ஒப்பாரி பாடல்களை பாடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இ. மஞ்சுளா, சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். அம்புஜம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.