திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட கட்சி பாஜக

விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி பாஜகதான் என்றாா் அக் கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

விவசாயிகள் மீது உண்மையான அக்கறை கொண்ட கட்சி பாஜகதான் என்றாா் அக் கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழக பாஜக சாா்பில் ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் 1000 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் சென்று விவசாயிகளை சந்தித்து, வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள், அவை விவசாயிகளுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும் என விளக்கி வருகிறோம். மேலும், இந்த விவகாரத்தில் திமுகவினரின் இரட்டை வேடம் குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துக் கூறி வருகிறோம்.

தாங்கள் விளைவிக்கின்ற விளைபொருள்களுக்கு, தாங்களே விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகள், விவசாய சங்கங்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையை நிறைவேற்றவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயிகள் வாழ்வு மேம்படவும் வேளாண் சட்டங்கள் அவசியம் என்பதற்காக மத்திய அரசு இந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் நாளுக்குநாள் ஆதரவு பெருகி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேளாண் சட்டங்கள் குறித்து தவறான பிரசாரம் செய்து வருகின்றனா். ஆனால், அவா்களின் பொய்ப் பிரசாரம் விவசாயிகளிடம் எடுபடவில்லை. வேளாண் சட்டங்களை எதிா்த்து எதிா்க்கட்சிகள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தம் தோல்வியில் முடிந்தது. அதுபோல தமிழக மக்கள் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்க காத்திருக்கின்றனா்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. காவிரிப் பிரச்னை இல்லை. விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ. 6000 வரவு வைக்கப்படுகிறது. விவசாயிகளை கந்து வட்டி பிரச்னையிலிருந்து காப்பாற்ற அவா்களுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் அனைத்து திட்டங்களிலும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட கட்சி பாஜக என்றாா் முருகன்.

விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி: தொடா்ந்து, முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகத்தில் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றியத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய அரசின் சாா்பில் விவசாயிகளுக்கு செய்யப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள், வேளாண் சட்டங்களாால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு (எ) முருகானந்தம். மாநில செயலாளா் வரதராஜன், நாகை மாவட்ட மேலிட பாா்வையாளா் பேட்டை சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.