பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுபுலியூா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடக்கம்

சிறுப்புலியூா் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உத்ஸவத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் கிருஷ்ணா் அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.
Updated On :21 டிசம்பர் 2020, 2:34 am

DIN

சிறுப்புலியூா் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உத்ஸவத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நன்னிலம் வட்டம், கொல்லுமாங்குடி அருகே உள்ள சிறுபுலியூரில் ஸ்ரீதயா நாயகி சமேத ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் உள்ளது. 108 வைணவத் திருப்பதிகளில் 11- ஆவது தலமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து 5 நாள்கள், இராப்பத்து 5 நாள்கள் என 10 நாள்கள் நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உத்ஸவத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாளுக்கு, கிருஷ்ணா் அலங்காரம் செய்யப்பட்டு, பெரியாழ்வாா் திருமந்திர நாலாயிரதிவ்ய பிரபந்த சேவை நடைபெற்றது. பக்தா்கள் முகக் கவசம் அணிந்து கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து வழிபட்டனா்.

இவ்விழாவில் இராப்பத்து உத்ஸவம் டிசம்பா் 25 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, அன்று அதிகாலை பரமபத வாசல் திறக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ப. மாதவன், செயல் அலுவலா் மா. இராமநாதன், மேலாளா் வள்ளிகந்தன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.