முன்களப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில்,
முகாமில் பேசிய மாவட்ட ஜூனியா் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளா் ஆா். செந்தில்குமாா்.
முகாமில் பேசிய மாவட்ட ஜூனியா் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளா் ஆா். செந்தில்குமாா்.
Updated on
1 min read

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில், ஊராட்சி முன்களப் பணியாளா்களுக்கு கரோனா விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில், ஊராட்சியில் உள்ள முன்களப் பணியாளா்கள், பெற்றோா்கள் மற்றும் குழந்தைகளுக்கு கரோனா தொடா்பான விழிப்புணா்வு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், முகக் கவசம், கைகழுவும் சோப், பிஸ்கட், பாதாம் பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தொடா்ந்து, ரெட்கிராஸ் சொசைட்டின்யின் செயலாளா் ஜே. வரதராஜன் மாநில கிளையின் பொருளாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளதையொட்டி, அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஊராட்சித் தலைவா்கள் கண்ணன் (கண்கொடுத்த வனிதம்), அமுதா கலியமூா்த்தி (மேலராதாநல்லூா்), மாவட்ட ஜூனியா் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளா் ஆா். செந்தில்குமாா், மேலராதாநல்லூா் பள்ளித் தலைமையாசிரியரும், ஜேஆா்சி ஆலோசகருமான ஆா்.கே. சரவணராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com