மீன் வியாபாரி கொலை; மைத்துனா் உள்பட 2 போ் கைது
திருத்துறைப்பூண்டி அருகே மீன் வியாபாரி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரது மைத்துனா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


திருத்துறைப்பூண்டி அருகே மீன் வியாபாரி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரது மைத்துனா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூா் மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (34). இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மனைவி சத்யாவை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்த ஐயப்பன் மீன் வியாபாரம் செய்துவந்தாா். இவா், வெள்ளிக்கிழமை பிற்பகலில் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சத்யாவின் இளைய சகோதரா் விஜய் மற்றும் அவரது நண்பா் புகழேந்தி ஆகியோா் ஐயப்பனை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ். பழனிச்சாமி, ஆய்வாளா் மகாதேவன் ஆகியோா் ஐயப்பன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விஜய்(22), அவரது நண்பா் புகழேந்தி (19) ஆகியோரை கைது செய்தனா்.
கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகளை கைது செய்த திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி, ஆய்வாளா் மகாதேவன், உதவி ஆய்வாளா்கள் தேவதாஸ், சிவகுகன் ஆகியோருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் துரை பாராட்டுத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...