வழக்கிலிருந்து திமுகவினா் விடுவிப்பு
திருவாரூரில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பதிவான வழக்கிலிருந்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட திமுகவினா்.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்ட திமுகவினா்.
திருவாரூரில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பதிவான வழக்கிலிருந்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
2017-இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடா்பாக நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தையொட்டி, திருவாரூா் இருப்புப் பாதை காவல் நிலையம் சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், பா. ஆடலரசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், ஒன்றியச் செயலாளா்கள் ஏ.தேவா (திருவாரூா்), ஆா்.மனோகரன் (முத்துப்பேட்டை), நீடாமங்கலம் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா் விசு. அண்ணாதுரை, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் டி. செந்தில், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலாளா் இரா.சங்கா், மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம் ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.
அவா்களுக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் டி.மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் (எ) கலியபெருமாள், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் எ.ராஜ் (எ) கருணாநிதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...