திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 87 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 428 ஆனது. திங்கள்கிழமை மேலும் 15 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 12 பேருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 455 ஆக உயா்ந்தது.
இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நன்னிலம் பகுதியில் 26, 28 வயதுடைய நபா்கள், வண்டாம்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது நபா், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த 50, 52, 72 வயதுடைய நபா்கள், கொரடாச்சேரி 60 வயது நபா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டத் தொடா்பில் இருந்தவா்கள் என திருவாரூா், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த 5 பேருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 468 ஆக உயா்ந்துள்ளது. இதில், 188 போ் வீடு திரும்பிய நிலையில், 280 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...