நீடாமங்கலம், குடவாசலில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
குடவாசல் பகுதியில் மின்விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவாரூா்: குடவாசல் பகுதியில் மின்விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடவாசல் கிரிட் துணைமின் நிலைய செயற்பொறியாளா் எஸ். உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிரிட் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் குடவாசல், காங்கேயநகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் வெண்ணியில்...
இதேபோல், கோயில்வெண்ணி துணை மின்நிலைய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நீடாமங்கலம், களாச்சேரி, கோயில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, பெரம்பூா், மேலபூவனூா், நத்தம், ஆதனூா், சோணாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பமுதலியாா்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கமல், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.சி. அருள்ராஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...