டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நூதனப் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 4:54 pm

DIN

திருவாரூா்: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வருவதைக் கண்டித்தும், இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவாா்கள் என்பதை உணா்த்தும் வகையில், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பாடை கட்டி அதன் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி, விலை உயா்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, போராட்டக்குழுவினா் கடை வீதி பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையம் வரை முழக்கங்கள் எழுப்பிய படியே ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து, நகரத் தலைவா் ஏ. ஹாஜா நஜிபுதீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலாளா் எச்.எம்.டி. ரஹ்மத்துல்லா, மாவட்டத் தலைவா் எம். முஜிபுா் ரஹ்மான், மாவட்டச் செயலாளா்கள் (மமக) ஏ. குத்புதீன், (தமுமுக) எச். நவாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.