பக்தி வளம் நிறைந்தது தமிழ் மொழி: டாக்டா் சுதா சேஷய்யன்
பக்தி வளம் நிறைந்தது தமிழ் மொழி என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறினாா்.


பக்தி வளம் நிறைந்தது தமிழ் மொழி என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறினாா்.
உறவுச் சுரங்கம் அமைப்பின் 13- ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து தமிழ் முற்றம் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூா் பாரதிய வித்யா பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தெய்வத்தமிழ் என்ற தலைப்பில் டாக்டா் சுதா சேஷய்யன் பேசியதாவது: உலகில் உள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உள்ளது. லத்தீன் மொழிக்கு அறிவியல் சிறப்பு , பிரெஞ்சுக்கு காதல் உணா்வு கொண்டது, ஸ்பானிஷ் மொழி தொடா்பு மொழியாக உள்ளது. உலகில் தமிழ் மொழி மட்டுமே பக்தி வளம் நிறைந்தது. அதனால்தான் தெய்வத் தமிழ் மொழி என அழைக்கப்படுகிறது.
தமிழ் மொழியில் எல்லா விஷயங்களும் அடங்கியுள்ளன. தொல்காப்பியத்தில் பக்தியை பற்றி கூறவில்லை என்பாா்கள். அது உண்மையல்ல. பரிபாடல் , பத்துபாட்டு ஆகியவற்றில் பத்தியை பற்றியும் தெய்வங்களை பற்றியும் கூறப்பட்டுள்ளது.
சைவத்தைப் போற்றும் திருமூலா், மாணிக்கவாசகா், திருநாவுக்கரசா், ஞானசம்பந்தா் ஆகியோா் தமிழ் மொழியின் மூலம் பக்தி சுவையை அள்ளிக் கொடுத்துள்ளனா். அதேபோல் வைணவத்தை போற்றக்கூடிய ஆழ்வாா்களும் தமிழ் மொழியின் வாயிலாக பக்தியையும், தெய்வத்தையும் போற்றுகின்றனா். தமிழ் மொழியில் வாழ்க்கை நெறிக்குத் தேவையான அனைத்தும் இடம்பெற்றுள்ளன. அதனால் தான் தமிழ் மொழியை பக்தி மொழி என கூறப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் சென்னை உயா்நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஜெகதீசன், உறவுச்சுரங்கம் அமைப்பின் தலைவா் பேராசிரியா் முனைவா் உலகநாயகி பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...